சனி, 31 அக்டோபர், 2009

இதுக்காக வாடலாமா

எல்லோர்க்கும் வாழ்க்கை இங்கே எண்ணம் போல வாய்க்காதம்மா
வாய்க்காட்டி விட்டுத்தள்ளு ஏன் ஏங்கணும்?

வந்தாலே வரவில் வைப்போம் விட்டுப்போனால் செலவில் வைப்போம்
வேண்டாத பாரம் எல்லாம் ஏன் தாங்கணும்?

பூப்பூத்ததெல்லாம் காயாகுதா காயானதெல்லாம் கனியாகுதா
இதுக்காக வாடலாமா, அதனால பாடுறேன்

சுவாரசியம் குறை

6 கருத்துகள்:

Ganesh Gopalasubramanian சொன்னது…

அப்படியே படத்தின் பெயரும் பாடலின் முதல் வரியும் தரலாமே...

Manki சொன்னது…

இந்தப்பாடலின் பல்லவி "என் ஊரு மதுரைப்பக்கம் என் பாட்டு மனசில் நிக்கும்". ஜேசுதாஸ் பாடியது. என்ன படம் என்று தெரியவில்லை.

Ganesh Gopalasubramanian சொன்னது…

இல்லை இந்த வலைப்பூவிலிருக்கும் அனைத்து இடுகைகளுக்கும் பாடலின் பல்லவி வரி தரலாமே. இனி ஒவ்வொரு இடுகைக்கும் இதைத் தொடரலாம்.

Manki சொன்னது…

திட்டம் அதுதான் கணேஷ், இனிவரும் பதிவுகளில் முடிந்தவரை தகவல் அளிக்கப் போகிறேன். ஏற்கெனவே இருக்கும் பதிவகளில் கொஞ்சம் கொஞ்சமாக தகவல் சேர்ப்பேன்.

(பி.கு: இந்த வலைப்பதிவை நீங்கள் வாசிப்பதே மகிழ்ச்சி கலந்த ஆச்சர்யம்!)

Ganesh Gopalasubramanian சொன்னது…

ரொம்ப நாள் ஆசை. இந்த மாதிரி சின்ன சின்ன துணுக்குகளாக ஒரு வலைப்பூ வேண்டுமென்று. துணுக்கு படிக்கிற பழக்கம் போக மாட்டேன்கிறது. நீங்க செய்ய ஆரம்பிச்சதும் ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.

அப்புறம் தமிழ்மணம், தமிழிஷ், உலவுன்னு பதிவை இணைச்சிடவேண்டியது தானே.

Manki சொன்னது…

நிறைய பேர் சொல்கிறார்கள், தமிழ்மணம் போன்றவற்றுடன் இணைக்கச்சொல்லி. நான்தான் இன்னும் சோம்பேறித்தனமாக இருக்கிறேன். :(