ஞாயிறு, 20 செப்டம்பர், 2009

அழாதே

தமிழர் காணும் துயரம் கண்டு தலையைச் சுற்றும் கோளே அழாதே
என்றோ ஒருநாள் விடியும் என்றே இரவைச் சுமக்கும் நாளே அழாதே
நூற்றாண்டுகளின் துருவைத் தாங்கி உறையில் தூங்கும் வாளே அழாதே
எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே

சுவாரசியம் குறை

கருத்துகள் இல்லை: