வியாழன், 16 டிசம்பர், 2010

வேற என்ன கேட்கப் போறேன்?

வேற என்ன உன் கிட்ட கேட்கப் போறேன்? குடிக்கிறதுக்கு கொஞ்சோண்டு தினம் பணமும், அதை பயந்து குடுக்குறதுக்கு நாலு சாதி சனமும் தான் கேட்கிறேன். வேற என்ன கேட்கப் போறேன்? Pick up பண்ணி விடு ஆத்தா, pick up பண்ணி விடு. தாயே, மாரியாத்தா!

சுவாரசியம் குறை

செவ்வாய், 30 நவம்பர், 2010

கேவலம் நாம எல்லாம் மனுஷங்க தானே

"பரவாயில்லை சார். உங்க இடத்துல நான் இருந்தாலும் இப்படித்தான் நடந்துக்குவேன். கேவலம் நாம எல்லாம் மனுஷங்க தானே."

"காளி!"

"பரவாயில்லை சார், என்ன ஆச்சு இப்போ? சார்...ரெண்டு கையும் ரெண்டு காலும் போனாக் கூட காளிங்கிறவன் பிழைச்சிக்கிடுவான் சார். கெட்ட பய சார் அவன்."

சுவாரசியம் குறை

வியாழன், 21 அக்டோபர், 2010

குளிக்காத குரங்கு

குத்தாலத்தில் இருந்தாலும் குளிக்காத குரங்குண்டு
சிரிக்காத ஆளும் இந்த ஊரில் உண்டு.

ஜோலி ஜோலி கொஞ்ச நேரம் ஜாலி ஜாலி கொஞ்ச நேரம்
ரெண்டும் இங்கே இல்லாதவன் மண்டு மண்டு

சுவாரசியம் குறை

திங்கள், 30 ஆகஸ்ட், 2010

நெஞ்சே நீ தூங்கு

நீதி மட்டும் உறங்காது
நெஞ்சே நெஞ்சே நீ தூங்கு
----------

நீ அன்று சிந்திய கண்ணீரில்
இந்த பூமியும் வானமும் நனைந்ததம்மா

சுவாரசியம் குறை

செவ்வாய், 17 ஆகஸ்ட், 2010

கரைகள்

நீர் நினைத்தால் பெண் நினைத்தால்
கரைகள் யாவும் கரைந்து போகக் கூடும்

சுவாரசியம் குறை

விழிப்பு

ஒவ்வொரு விழிப்பும் ஒவ்வொரு பிறப்பு
அதை நீ மறவாதே

சுவாரசியம் குறை

பாடம்

வார்த்தைகள் கற்க நான் பள்ளிக்கூடம் சென்றேன்
வாழ்க்கையைக் கற்க நான் வாசல் தாண்டி வந்தேன்

சுவாரசியம் குறை

வெள்ளி, 28 மே, 2010

வரமும் சாபமும்

வரங்களே சாபங்கள் ஆகுமென்றால்
இங்கே தவங்கள் எதற்காக?

சுவாரசியம் குறை

வெள்ளி, 21 மே, 2010

எப்படி என் ஆட்டம்?

நான் அப்படித்தான் நெனச்சேன்

சுவாரசியம் குறை

புதன், 12 மே, 2010

சீவன் சிவலிங்கம்

உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்தும் காளா மணிவிளக்கே.

சுவாரசியம் குறை

செவ்வாய், 11 மே, 2010

மீனாக்ஷி பேச மாட்டாங்களா?

"மீனாக்ஷி பேச மாட்டாங்களா?"
"பேசணுமா? பேசிடுறேன்!"

சுவாரசியம் குறை

செவ்வாய், 4 மே, 2010

நான் வாழ வைப்பேன்

கள்ளம் இல்லை நெஞ்சில் கபடம் இல்லை
நாம் கண்ணீர் சிந்த ஒரு நியாயம் இல்லை
---------------

காலம் தனை நான் மாற வைப்பேன்
கண்ணே உனை நான் வாழ வைப்பேன்
என் ராஜாத்தி கண்ணே கலங்காதிரு

சுவாரசியம் குறை

வெள்ளி, 23 ஏப்ரல், 2010

ஜெஸ்ஸி

"உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும், நீ ஏன்டா ஜெஸ்ஸியை லவ் பண்ண?"
"அதைத் தான் சார் நானும் யோசிச்சிட்டிருக்கேன்"
"ஏய், உயிரைக் கொடுக்கலாம்ணு சொன்னியே, அது உண்மையாயிடும் போல இருக்குதுடா தம்பி, பாத்துக்கோ."

சுவாரசியம் குறை

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

பழமொழி

பழமொழி சொன்னா அனுபவிக்கணும். ஆராயக் கூடாது.

சுவாரசியம் குறை

பிறந்தேன்

நித்த நித்தம் துயின்றெழுந்து
புத்தி யில்லாப் புல்லருடன் போக்கி
அத்த மித்தவுடன் விழு பணத்தை
மண்ணைக் கல்லைத் தொழுதற்கோ
யான் பிறந்தேன்?

சுவாரசியம் குறை

வெள்ளி, 9 ஏப்ரல், 2010

ஓஹோ புரொடக்ஷன்ஸ்

"நீங்க இந்த ஓஹோ புரொடக்ஷன்ஸ் பத்திக் கேள்விப்பட்டிருக்கீங்ளா?"
"ஓஹோ"

சுவாரசியம் குறை

வியாழன், 8 ஏப்ரல், 2010

குழந்தைகளின் உலகம்

சின்னக் குழந்தைகளின் உலகில் தேவதைகளோ பூக்களோ வருவதில்லை. மிகப்பெரிய, வானம் வரை பெரிய, ஒரு சின்னக் குழந்தைதான் வரும்.
---------------

மூன்று என்பது முடிவின்மையைக் குறிக்கும் பூடக எண்.

சுவாரசியம் குறை

திங்கள், 29 மார்ச், 2010

தனியாகப் பேசிடும் சந்தோஷம்

தனியாகப் பேசிடும் சந்தோஷம் தந்தாய் பெண்ணே பெண்ணே
----------

இந்தக் காதல் வந்து விட்டால் நம் தேகம் மிதந்திடுமே
விண்ணோடும் முகிலோடும் விளையாடித் திரிந்திடுமே

சுவாரசியம் குறை

சனி, 27 மார்ச், 2010

குடிகாரன்

குடிக்காமலிருப்பவர்கள் அறிவதில்லை நான் குடிக்காதபோதும் குடிகாரன்தான் என. குடிக்காமலிருக்கும் குடிகாரன். அவ்வளவுதான் வித்தியாசம்.

சுவாரசியம் குறை

வெள்ளி, 19 மார்ச், 2010

கையை நீட்டுற பழக்கம்

வேலு நாயக்கர்: நேத்துப் பொறந்த பொண்ணு நீ... கையை நீட்டுற! எங்க இருந்து வந்தது இந்தக் கையை நீட்டுற பழக்கம்?
செல்வா: நம்மகிட்ட இருந்துதான். நாயக்கரே, விடுங்க நாயக்கரே

சுவாரசியம் குறை

மொழி இல்லாத பிள்ளை

வழியில்லாத ஊமை எது சொன்னாலும் பாவம்
என் நெஞ்சும் என்னோடு பகையானது
----------

நான் இப்போது ஊமை மொழி இல்லாத பிள்ளை
என்றேனும் ஓர் நாளில் நான் பேசலாம்
----------

உன் பாதை நீ கண்டு நீ வாழலாம்
இனி என் பாதை நான் கண்டு நான் போகலாம்
எங்கே நீ சென்றாலும் சுகமாகலாம்
நான் எப்போதும் நீ வாழ இசை பாடலாம்

சுவாரசியம் குறை

நானும் உண்டு நாடகத்தில்

நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு
----------

பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள்
அந்தப் பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான்
நானிருக்கும் நிலையில் உன்னை என்ன கேட்பேன்!
----------

உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா
இதை உணர்ந்துகொண்டேன் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா

சுவாரசியம் குறை

Mr Ars

Mr. A. Ars! You are a good man.

சுவாரசியம் குறை

காவியம் போன்ற காதல்

காவியம் போலொரு காதலைத் தீட்டுவான்
காரணம் ஏதுமின்றி காட்சியை மாற்றுவான்
ரயில் ஸ்நேகமாய் புயலடித்த மேகமாய்
கலைந்து வந்து கூடும் பின் ஓடும் நாம் கூத்தாடும் கூட்டமே

சுவாரசியம் குறை

ஞாயிறு, 14 மார்ச், 2010

பூனை

பூனைடா நீ, bloody cat with nine lives!

சுவாரசியம் குறை

வெள்ளி, 12 மார்ச், 2010

வெள்ளை ரத்தம்

காதல் என்றால் கண்ணில் யுத்தம்
கண்ணீர் எல்லாம் வெள்ளை ரத்தம்

உறவும் நட்பும் பிம்பம் பிம்பம்
உள்ளம் எங்கே நம்பும் நம்பும்

பொய்களின் கரைக்கு நடுவிலே போகுதே வாழ்க்கை நதி

சுவாரசியம் குறை

திங்கள், 8 மார்ச், 2010

சொந்தம்

எத்தனையோ பட்சி வந்து தங்கிச் செல்லுது -- அவை
ஒன்றுக்கொன்று சொந்தம் என்றா சொல்லிக் கொள்ளுது?

சுவாரசியம் குறை

சனி, 20 பிப்ரவரி, 2010

சாம்பல் ருசி

ஐயிரண்டு மாதம் என்று அன்னை படும் வேதனை
கையிரண்டில் தேனையள்ளிக் கொண்டுவரும் சாதனை
சோறுமின்றி நீருமின்றி சாம்பல் தின்னத் தோன்றலாம்
தித்திக்கின்ற முத்தங்களைப் பிள்ளையிடம் வாங்கலாம்

சுவாரசியம் குறை

வியாழன், 18 பிப்ரவரி, 2010

கடைசியிலே அழுத கண்ணீர்

கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியிலே அழுத கண்ணீர்
கையில் இன்னும் ஒட்டுதடி

சுவாரசியம் குறை

தொலைந்து போனவன்

கண்விழித்துப் பார்த்தபோது கலைந்த வண்ணமே
உன் கைரேகை ஒன்று மட்டும் நினைவுச் சின்னமே
----------

கண்ணீரில் தீ வளர்த்துக் காத்திருக்கிறேன்
உன் காலடித்தடத்தில் நான் பூத்திருக்கிறேன்

சுவாரசியம் குறை

புதன், 17 பிப்ரவரி, 2010

யாரோ ஒருத்தரின் விசும்பல்

ஓங்கி ஒலிக்கும்
கெட்டிமேளத்தில்
அமுங்கிப் போகிறது
யாரோ ஒருத்தரின்
விசும்பல் சத்தம்
எப்போதும்

சுவாரசியம் குறை

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

உன்னால் தானே நானே வாழ்கிறேன்

முதல் கனவு முடிந்திடும் முன்னமே தூக்கம் கலைந்ததே!
----------

தொடர்ந்து வந்த நிழலும் இங்கே தீயில் சேர்ந்து போகும்,
திருட்டுப் போன தடயம் பார்த்தும் நம்பவில்லை நானும்.
ஒரு தருணம் எதிரினில் தோன்றுவாய், என்றே வாழ்கிறேன்!

சுவாரசியம் குறை

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

வாடி நின்றால்

வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை

சுவாரசியம் குறை

சனி, 23 ஜனவரி, 2010

நீயே அன்னை

தாயென்று உன்னைத்தான் பிள்ளைக்குக் காட்டினேன் தாயே!

சுவாரசியம் குறை

புதன், 20 ஜனவரி, 2010

இத்துடன் சோகம் சென்றதடி

இரு கண்ணே செந்தமிழ்த்தேனே
தந்தையின் பாசம் வென்றதடி
பசும்பொன்னே செவ்வந்திப்பூவே
இத்துடன் சோகம் சென்றதடி

சுவாரசியம் குறை

வியாழன், 7 ஜனவரி, 2010

உன் கவிதையை நீ எழுது

அதற்கு உனக்கு வக்கில்லை என்றால்
ஒன்று செய்
உன் கவிதையை நான் ஏன் எழுதவில்லை என்று
என்னைக் கேட்காமலேனும் இரு.

சுவாரசியம் குறை

செவ்வாய், 5 ஜனவரி, 2010

கிறுக்கல்

உங்களால்
படிக்க முடியாதபோது
எழுத்துக்களைக்
கிறுக்கல்
என்கிறீர்கள்

எழுத்துக்களால்
எழுத முடியாதபோது
நான் கிறுக்குகிறேன்.

சுவாரசியம் குறை